Friday 31 July 2015

போடிநாயக்கன்பட்டி , நாமக்கல் 8 ம் வகுப்பு

இன்று  31.07.2015 விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. அப்பள்ளியில் 8 வகுப்பு பயிலும் 29 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த கால்நடை மருத்துவர் பிரகாஷ் அவர்களின் சார்பாக அவரின் தகப்பனார் திரு. நல்லப்பன் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் .இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.








போடிநாயக்கன்பட்டி ,நாமக்கல் - 5 ம் வகுப்பு

விதை அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா இன்று 31.07.2015 நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. அப்பள்ளியில் 5 வகுப்பு பயிலும் 24 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த கால்நடை மருத்துவர் பிரகாஷ் அவர்களின் சார்பாக அவரின் தகப்பனார் திரு. நல்லப்பன் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.





நல்லா கவுண்டன் பாளையம் மற்றும் அத்தியப்பம் பாளையம் , நாமக்கல் * 5 ம் வகுப்பு

வணக்கம். இந்த கல்வியாண்டின் முதல் நூல் வழங்கும் விழாவானது 23.07.2015 அன்று திரு. பரமசிவம், கணினி பொறியாளர், அமெரிக்கா மற்றும் அவரது மனைவி திருமதி .நிர்மலா அவர்களால்  நல்லாக்கவுண்டன் பாளையம் மற்றும்  அத்தியப்பம்பாளையம் ,நாமக்கல் மாவட்டம் ஆகிய ஊராட்சிகளில்அமைந்துள்ள துவக்க பள்ளியில் 5 வகுப்பு பயிலும்  18 மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டன.






திரு.பரமசிவம் அவர்களின் மின்னஞ்சல் முகவரி   params.k@gmail.com


Wednesday 8 July 2015

புதிய கல்வி ஆண்டு 2015-16 தொடக்கம்

அனைவருக்கும் வணக்கம்,

    கடந்த கல்வியாண்டில் நமது அமைப்பானது 3 மாவட்டங்களில் 11 வகுப்புகளில் பயிலும் 324 மாணவ மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் நூல்களை வழங்கியது.

         நூல்களை நன்கொடையாக வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் மாணவ மாணவிகளின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

         இவ்வாண்டு ஜீலை 15 ம் தேதிக்கு மேல் நூல்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     

        இந்த கல்வியாண்டில் தங்கள் படித்த மற்றும் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி வகுப்புகளுக்கு நூல்களை வழங்க விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

விதை அமைப்பானது தமிழகத்தில் அரசு பள்ளியில் 4 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நூல்களை வழங்கி வருகிறது.

தங்களது மேலான கருத்துகளும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.


செந்தில்குமார்
நாமக்கல்

92455 45899

vithai.tamilnadu@gmail.com