Friday 22 December 2017

அரசு நடுநிலைப்பள்ளி நடுக்கோம்பை , சேந்தமங்கலம் ஒன்றியம் 4,5,6,7,மற்றும் 8 ம் வகுப்புகள்

இன்று 22.12.2017 சேந்தமங்கலம் ஒன்றியம்  நடுக்கோம்பை கிராமத்தில் உள்ள தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில்  மாணவ மாணவிகளுக்கு நூல்கள் வழங்கும் விழா விதை அமைப்பால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. இவ்விழாவில் வீரக்குமார் 94425 41418 காட்டுகொட்டாய், செங்காடு, நடுக்கோம்பை அவர்களால் அப்பள்ளியில் 6ம், 7ம் மற்றும் 8 ம் வகுப்புகளில் பயிலும் 56 மாணவ மாணவிகளுக்கு நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அப்பள்ளியில் 4 ம் மற்றும் 5 ம் வகுப்புகளில் பயிலும் 24 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்  விசயக்குமார் 94432 17843  அவர்களால் புத்தகங்கள்  நன்கொடையாக வழங்கப்பட்டன.  இவர் இதற்கு முன்   02.01.2015 அன்று இப்பள்ளிக்கு நன்கொடையாக நூல்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கியிருக்கிறார்.






8  ம் வகுப்பு




7 ம் வகுப்பு




6 ம் வகுப்பு




5 ம் வகுப்பு




4 ம் வகுப்பு



Friday 15 December 2017

தாதம்பட்டி ,வேட்டாம்பாடி ஊராட்சி , நாமக்கல் மாவட்டம் 4 மற்றும் 5 ம் வகுப்புகள்

இன்று 15.12.2017 நாமக்கல் ஒன்றியம் வேட்டாம்பாடி ஊராட்சி  தாதம்பட்டி கிராமத்தில் உள்ள தமிழக அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நூல்கள் வழங்கும் விழா விதை அமைப்பால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. அப்பள்ளியில் 4 மற்றும் 5 ம் வகுப்புகளில் பயிலும் 34 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த கால்நடை மருத்துவர் மாதேஸ்வரி  அவர்களால் புத்தகங்கள்  நன்கொடையாக வழங்கப்பட்டன.  இவர் இதற்கு முன்  07.8.2015   அன்று  இப்பள்ளிக்கு நன்கொடையாக நூல்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கியிருக்கிறார்.