Showing posts with label திருவாரூர். Show all posts
Showing posts with label திருவாரூர். Show all posts

Friday, 21 February 2020

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலகண்டமங்கலம்,திருவாரூர்

மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று  உலகத் தாய்மொழி நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் உ. அமுதா தலைமை வகித்தார். ஆசிரியர் மோகன் அனைவரையும் வரவேற்றார். முகநூல் மூலமாக நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் விதை அமைப்பினரிடையே பள்ளி ஆசிரியர் முனைவர் மணி கணேசன், தம் பள்ளி மாணவ மாணவியரிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் பலதரப்பட்ட நல்ல நூல்களை வாசித்து அறிவை வளர்க்கும் வகையிலும் வாசிப்பை நேசிப்போம் என்ற அருமையான திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை ஏற்ற விதை அமைப்பு இப்பள்ளியில் பயிலும் 5,6, 7,8 வகுப்புகளைச் சார்ந்த சுமார் 50 மாணவர்களுக்கு பொது அறிவு, சிந்தனை, அறிவியல் அறிஞர்கள், புதிர் கணக்கு, தேசத் தலைவர்கள் வரலாறு, பொன்மொழிகள், பஞ்சதந்திர கதைகள், நீதிக் கதைகள்  எனப் பல்வேறு தலைப்பின்கீழ் 50 மேற்பட்ட நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு மாணவருக்கு ஒரு நூல் (வாரம் ஒரு நூல்) என மாணவர் வாசிப்பதற்கு வழங்கியதை பள்ளி மாணவர் ஒவ்வொருவருக்கும் இன்று மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் வழங்கப்பட்டதை மிகுந்த நன்றியுடன் பகிர்கிறேன்.

முனைவர் மணி கணேசன்
9442965431

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மேலகண்டமங்கலம்,
ஆதிச்சபுரம் அஞ்சல்
கோட்டூர்,
திருவாரூர்-614717









ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மேலகண்டமங்கலம்,
ஆதிச்சபுரம் அஞ்சல்
கோட்டூர்,
திருவாரூர்-614717

முனைவர் மணி கணேசன்
9442965431