Thursday 18 July 2024

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாதகவுண்டன்பாளையம் , மொடக்குறிச்சி , ஈரோடு மாவட்டம் 638115

 மதிப்பிற்குரிய விதை சிறார் வாசிப்பு இயக்க நிர்வாகி அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எங்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்த புத்தகங்கள் வந்து சேர்ந்தது என்பதை தங்களது கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு தங்களது விதை பத்திரிகையினை வழங்கியமைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றிங்க ஐயா




Wednesday 3 July 2024

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேட்டாம்பாடி, நாமக்கல் ஒன்றியம் நாமக்கல் மாவட்டம்



 இன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேட்டாம்பாடி, நாமக்கல் ஒன்றியம் நாமக்கல் மாவட்டம் பயிலும் 4 மற்றும் 5 வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு திரு.சர்வேஸ் குப்புசாமி அவர்களால் பட்டம் இதழ்கள் வழங்கப்பட்டன.

Friday 21 June 2024

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி (அஞ்சல்), அஞ்சல் குறியீட்டு எண்:639201.கரூர் மாவட்டம்

 மகிழ்கின்றோம்☺ நெஞ்சம் நிறைந்த நன்றி கூறுகின்றோம்🙏🏻 இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு வாசித்தல் சுவாசித்தலாக மாற வேண்டிய அவசியம் உள்ளது.சிறந்த வாசிப்பு மாணவர்களுடைய உன்னத நிலையை அடையச் செய்வதற்கு  உதவும் வகையில் செயல்படும் நாமக்கல்லைச் சார்ந்த "விதை" சிறார் வாசிப்பு இயக்ககம் நமது அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு காலைக்கதிரின் மாணவர் பதிப்பான பட்டம் 125 பிரதிகளும், மேலும் சிறார் இதழ்களான பொம்மி, சுட்டியானை ஆகியவற்றை வழங்கியிருந்தனர்.அதன் வாசிப்பு துவக்க விழாவை தலைமையாசிரியர் துவக்கி வைக்க வாழ்த்துரைகளை ஷகிலா பானு, சரசேஸ்வரி, சகாயவில்சன் ஆகியோர் வழங்கினர். நன்றி உரையை உஷாராணி ஆசிரியர் வழங்கினார். இந்த சிறப்பான கோரிக்கையை ஏற்ற "விதை" செந்தில் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்🌹🙏🏻 "வாருங்கள்! வாசிப்போம்"!

மு.சாகுல்அமீது, 

தலைமைஆசிரியர்,

ஊ.ஒ.ந.நி.பள்ளி,

 அரவக்குறிச்சி ,

 கரூர் மாவட்டம்.9944115724












Saturday 4 February 2023

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜங்கமநாயக்கன்பட்டி, பரமத்தி ஒன்றியம். நாமக்கல் மாவட்டம்





 7ம் வகுப்பு மாணவர்கள், பட்டம் மாணவர் பதிப்பை தினம் படிக்கிறார்கள் 

ஐயா தாங்கள் அரசு பள்ளிகளுக்கு செய்து வரும் இந்த சேவை மனதார பாராட்டுகிறோம் எங்கள் பள்ளி மாணவர்கள் தினம் இந்த பட்டம் மாணவர் பதிப்பை படித்து பயன்படுகிறார்கள் எனவே அவர்களின் சார்பாகவும் தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்


வ. குமரேசன்

பட்டதாரி ஆசிரியர் கணிதம்

ஊ. ஒ. நடுநிலைப் பள்ளி ஜங்கமநாயக்கன்பட்டி பரமத்தி ஒன்றியம் நாமக்கல் மாவட்டம்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெள்ளை பிள்ளையார் கோவில், வெண்ணந்தூர் ஒன்றியம் நாமக்கல் மாவட்டம்





 ஆசிரியை எண் 91 80122 87611

Thursday 1 December 2022

குருக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மல்லசமுத்திரம். நாமக்கல்

 தினந்தோறும் பட்டம் மாணவ இதழ்களைப் பெற்று மாணவ செல்வங்கள் வசித்து மகிழ்ந்த தருணங்கள்



அரசு உயர்நிலைப் பள்ளி ஆனந்தபுரம் , தூத்துக்குடி

இன்று அரசு உயர்நிலைப் பள்ளி ஆனந்தபுரம் , தூத்துக்குடி ல்  6,7 மற்றும் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கால்நடை மருத்துவர் 
மரு. உ. முகேஷ், B.V.Sc., &AH., 
கால்நடை மருந்தகம்
ஆனந்தபுரம், 
திருச்செந்தூர் கோட்டம், 
தூத்துக்குடி-628 701 
அவர்களால் பட்டம் மாணவ இதழ்கள் வழங்கப்பட்டன.







 

Thursday 17 November 2022

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காவேட்டிப்பட்டி, நாமக்கல் நகரம், நாமக்கல் மாவட்டம்

 தினந்தோறும் பட்டம் மாணவ இதழ்களைப் பெற்று மாணவ செல்வங்கள் வசித்து மகிழ்ந்த தருணங்கள்






Wednesday 9 November 2022

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செக்கானூரணி, மதுரை

 அரசு ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளியில் 6,7 மற்றும்  8 ம் வகுப்பு பயிலும் மாணவ செல்வங்களுக்கு இன்று விதை அமைப்பு சார்பாக பட்டம் நாளிதழ் வழங்கப்பட்டன.


ஒருங்கிணைப்பு

கால்நடை மருத்துவர் . கீர்த்தனா

விக்கிரமங்கலம்







Thursday 13 October 2022

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலைப்பட்டி, நாமக்கல் நகரம், நாமக்கல் மாவட்டம்

 இன்று எங்கள் ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி முதலைப்பட்டி பள்ளியில் மாணவர்கள் தனித்திறமை வளர்க்கவும், பொது அறிவை வளர்த்து கொள்ளவும் காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழ்(மாணவர்களுக்கான இதழ்)(விதை அமைப்பு பங்களிப்பு 80% ஆசிரியர் சார்பில் எனது பங்களிப்பு 20% ). இந்த கல்வியாண்டு முழுவதும் தினம் 5 இதழ்கள் வழங்கிய விதை அமைப்பிற்கு பள்ளியின் சார்பில் மனதார நன்றியை கூறிக் கொள்கிறோம் நன்றி ஐயா  காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழை மாணவர்களுக்கு வழங்கி மகிழ்வித்த தருணம்




Saturday 12 February 2022

அரசு நடுநிலைப் பள்ளி, காவேட்டிப்பட்டி, நாமக்கல் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்

 


ஒருங்கிணைப்பு

திரு. சிபி பாலா 89255 30577

இளங்கலை மருத்துவ மாணவர்

மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி

சேலம்

Friday 11 February 2022

அரசு உயர்நிலைப் பள்ளி அய்யம்பாளையம், நாமக்கல் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்.



 

ஒருங்கிணைப்பு

திரு. A.V. சஞ்சய், இளங்கலை பொறியியல் மாணவர்,
(நாமக்கல்)

8903225113

Nitte, Karkala Taluk,Udupi - 574110
Karnataka, India

அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ( வடக்கு ), நாமக்கல் மாவட்டம்.

 



நாமக்கல்லை சேர்ந்த விதை என்ற அமைப்பின் மூலம் நம் அரசு மேல்நிலைப்பள்ளி நாமக்கல் வடக்கு பள்ளி மாணவர்களுக்கு அவர்களது அறிவாற்றலை வளர்க்கும் வகையில் பட்டம் மாதாந்திர இதழ் வழங்கப்பட்டது. விதை அமைப்பிற்கு எனது பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆசிரியர் பிரபு

97903 85529


ஒருங்கிணைப்பு

திரு. A.V. சஞ்சய், இளங்கலை பொறியியல் மாணவர்
நாமக்கல் 

8903225113

Nitte, Karkala Taluk,Udupi - 574110. Karnataka, India


Thursday 10 February 2022

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முதலைப்பட்டி புதூர், நாமக்கல் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்

6,7 மற்றும் 8 ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பட்டம் இதழ்கள் வழங்கப்பட்ட நிகழ்வு.

ஒருங்கிணைப்பு

  • திரு. A.V. சஞ்சய், இளங்கலை பொறியியல் மாணவர்,நாமக்கல் 8903225113



 

Friday 12 November 2021

Efficient Team சார்பில் இணைய வழியில் நடைபெற்ற ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு மற்றும் நன்னெறி வகுப்பில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு 75 ஆங்கில பேச்சுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 Children's day and certificate distribution function for Google meet online spoken English class 2nd batch students

கொரோனா ஊரடங்கின் போதும் பள்ளி திறக்க இயலாத நிலையில் மாணவர்கள் கல்வி நலன் மேம்படவும் ஒழுக்க நெறியை வளர்க்கும் வகையில் நாமக்கல்லை மையமாக கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் Efficient Team சார்பில் இணைய வழியில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு மற்றும் நன்னெறி வகுப்பு தினமும் ஒருமணிநேரம் கூகுள் மீட் வழியாக 26.4.2021முதல்10.9.21வரை நடைபெற்ற பேச்சு பயிற்சி வகுப்பு நிறைவு சான்றிதழ் வழங்குதல் மற்றும் குழந்தைகள் தின விழா இன்று 13.11.2021மாலை 6.30மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நாமக்கல்லில் பணியாற்றும் முதுகலை விரிவுரையாளர் உயர்திரு  கா.சையத்முஸ்தபா அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து இணைய வழியில் சான்றிதழை வழங்கியும் குழந்தைகள் நல்ல நெறிகள் தன்னம்பிக்கை வாய்ப்பு உருவாக்குதல் குழந்தைகள் தின வாழ்த்துகள் கூறி சிறப்புரையாற்றினார் .மேலும் நிகழ்வை பற்றி வளையப்பட்டி  அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் திரு ப.தமிழ்ச்செல்வன் ஐயா  அவர்கள்  வாழ்த்துகளை கூறி சிறப்பித்தார்.  மேலும் நிகழ்வில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் பேச்சு பாட்டு கவிதை நடன நிகழ்ச்சிகள் என பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும்  வரவேற்று திரு பூ.பிரபு பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி நாமக்கல் வடக்கு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.நிகழ்வை திருமதி சிந்துஜா ஆசிரியை அவர்கள் தொகுத்து வழங்கினார்.நிகழ்வில் ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி முதலைப்பட்டி கணித ஆசிரியர் திரு சு.சரவணன் பட்டதாரி ஆசிரியர் நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்வில் திரு ராஜ்.முருகன் பட்டதாரி ஆசிரியர் சங்ககிரி திருமதி விஜயலட்சுமி ஆசிரியை சேலம் திருமதி புனிதா ஆசிரியை சேலம் திரு சுரேஷ்குமார் பட்டதாரி ஆசிரியர் சேரிப் பாளையம் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இணைய வழியில் வழங்கிய சான்றிதழ் பரிசு அஞ்சல் வழியாக மாணவர்கள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி நலனுக்காக அன்பளிப்பாக 75 ஆங்கில பேச்சுபுத்தகம் வழங்கிய விதை அமைப்புவிற்கும் அன்பளிப்பாக சான்றிதழ் வழங்கிய திரு ராஜ்முருகன் ஐயா விற்கும் பதக்கம் வழங்கிய மோகன சுந்தரி ஆசிரியை வசந்தி ஆசிரியை ராமமூர்த்தி ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.இந்த நிகழ்வை ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் குழு  Efficient Teachers Team Namakkal ஒருங்கிணைப்பாளர்கள் திரு சு.சரவணன் திரு பூ.பிரபு திரு ராஜ்.முருகன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் குழந்தைகள் தின விழா மற்றும் சான்றிதழ் வழங்குதல் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர்கள்

 Efficient Teachers Team Namakkal 

 திரு சு.சரவணன் 98944 37223

 திரு பூ.பிரபு 97903 85529

 திரு ராஜ்.முருகன்