Friday 21 June 2024

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி (அஞ்சல்), அஞ்சல் குறியீட்டு எண்:639201.கரூர் மாவட்டம்

 மகிழ்கின்றோம்☺ நெஞ்சம் நிறைந்த நன்றி கூறுகின்றோம்🙏🏻 இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு வாசித்தல் சுவாசித்தலாக மாற வேண்டிய அவசியம் உள்ளது.சிறந்த வாசிப்பு மாணவர்களுடைய உன்னத நிலையை அடையச் செய்வதற்கு  உதவும் வகையில் செயல்படும் நாமக்கல்லைச் சார்ந்த "விதை" சிறார் வாசிப்பு இயக்ககம் நமது அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு காலைக்கதிரின் மாணவர் பதிப்பான பட்டம் 125 பிரதிகளும், மேலும் சிறார் இதழ்களான பொம்மி, சுட்டியானை ஆகியவற்றை வழங்கியிருந்தனர்.அதன் வாசிப்பு துவக்க விழாவை தலைமையாசிரியர் துவக்கி வைக்க வாழ்த்துரைகளை ஷகிலா பானு, சரசேஸ்வரி, சகாயவில்சன் ஆகியோர் வழங்கினர். நன்றி உரையை உஷாராணி ஆசிரியர் வழங்கினார். இந்த சிறப்பான கோரிக்கையை ஏற்ற "விதை" செந்தில் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்🌹🙏🏻 "வாருங்கள்! வாசிப்போம்"!

மு.சாகுல்அமீது, 

தலைமைஆசிரியர்,

ஊ.ஒ.ந.நி.பள்ளி,

 அரவக்குறிச்சி ,

 கரூர் மாவட்டம்.9944115724












No comments:

Post a Comment