இன்று விதை அமைப்பின் சார்பாக நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் , முத்துகாப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள புதுக்கோம்பை ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 3 வகுப்பில் 6 ம் , 4 வகுப்பில் 8 ம் மற்றும் 5 ம் வகுப்பில் 7 ம் ஆக மொத்தம் 21 மாணவ மாணவிகளுக்கு டாக்டர் . கதிரேசன் அவர் நன்கொடையால் நூல்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் ஆண்டாக டாக்டர் . கதிரேசன் அவர்கள் இப்பள்ளிக்கு நன்கொடை அளிக்கிறார். கடந்த வருடம் 24.10.2014 அன்று டாக்டர் . கதிரேசன் அவர்கள் நூல்கள் வழங்கிய நிகழ்ச்சியின் பதிவை பார்வையிட சொடுக்கும். தொடர்ந்து விதை அமைப்பின் நூல் வழங்கும் நிகழ்ச்சிக்கு நன்கொடையாக நூல்களை அளித்து வரும் டாக்டர் . கதிரேசன் , அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
5 ம் வகுப்பு
3 ம் வகுப்பு
No comments:
Post a Comment