Wednesday 10 April 2019

பாரதி மான்யத் துவக்கப் பள்ளி, சின்னபெருமாப்பட்டி, எருமப்பட்டி ஒன்றியம், நாமக்கல்- 10.04.2019

புத்தகங்களைப் பெற்ற மகிழ்ச்சியுடன் குழந்தைகள்


நண்பன் பெற்ற 'ஜல்லிக்கட்டு' புத்தகத்தை ஆர்வத்துடன் எட்டிப் பார்க்கும் மாணவர்கள்


ஆசிரியர்களுக்கு புத்தகங்களை வழங்கும் முன்னாள் மாணவி மரு.கு.கீர்த்தனா B.V.Sc.&A.H.,

தன் முன்னாள் மாணவிக்கு புத்தகத்தை வழங்கி மகிழும் ஆசிரியர்கள்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், சின்னபெருமாப்பட்டி பாரதி மான்யத் துவக்கப் பள்ளியில் ‘விதை’ அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. நீண்ட நெடுங்காலமாக சுற்றுவட்டார மக்களின் கல்விக்கு ஆதாரமாக இருக்கும் இப்பள்ளியில் 160 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் உள்ளனர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய தலைப்புகளில், அப்பள்ளியின் முன்னாள் மாணவியும், கால்நடை மருத்துவருமான கு.கீர்த்தனா அவர்களால் வழங்கப்பட்டது. மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுவதும் அதன்மூலம் அவர்களிடம் அறிவு தேடலை விதைப்பதுமே இதன் நோக்கமாகும். விரும்பிய புத்தகங்கள் கிடைத்ததில் மாணவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் விழாவில் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களின் கற்றலை எளிதாக்கும் வகையில், முன்னாள் மாணவர் திரு.ரவிக்குமார் அவர்களின் உதவியுடன், செல்போன் கொண்டு இயக்கப்படும்ஸ்மார்ட் வகுப்புகள் இரண்டு வகுப்பறைகளில் அமைக்கப்பட்டுள்ளன.
      

No comments:

Post a Comment