Wednesday 27 November 2019

PUMS, Kavundachipalayam,Chennimalai, Erode




ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கவுண்டச்சிபாளையம்
வெள்ளோடு
சென்னிமலைஒன்றியம் 
ஈரோடு மாவட்டம்

ஆசிரியரின் பின்னூட்டம்


#வாசிப்பு இருந்தால் நேசிப்பு வரும்#


புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் வரும் என்பார்கள். இப்பழக்கம் உடைய சிலருக்கு துணையாக இருப்பது நூலகங்கள். பரந்து பட்ட அறிவைப் பெற பல்துறை புத்தகங்களையும் வாசிப்பது அவசியம் என்பது கற்றறிந்த பெரியவர்களின் கருத்து. வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலேயே வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை என்கிறார்கள் படைப்பாளர்கள்.
பாடப் புத்தகங்கள் மட்டுமே பயன்தராது, பரந்து விரிந்த உலகில், பல விதமான நூல்களையும் வாசிக்க, மாணவர்கள் பழக வேண்டும் என்பது ஆசிரியர்களின் அறிவுரை. வருங்காலச் சந்ததிக‌ள் பல சங்கதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமானால், நூலகங்கள் நிலைத்திரு‌த்தல் அவசியம். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன் என்பதை விட, நேரம் ஒதுக்கி வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே வாசிப்பதை நேசிப்பவர்களின் கருத்து இன்றைய காலகட்டத்தில் வாசிக்கும் பழக்கம் குழந்தைகளிடையே குறைந்துகொண்டே வருகிறது பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் வளர ஏதுவாக புத்தகங்கள் வழங்கி ஊக்குவித்து வருகின்றனர் விதை அமைப்பினர். எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கி ஊக்குவித்த விதை அமைப்புக்கு நன்றிகள்.

No comments:

Post a Comment