Thursday 15 February 2018

ஊ.ஒ.தொ.பள்ளி, மே.தாதனூர், அயோத்தியா பட்டணம்,சேலம் மாவட்டம்

நமது அமைப்பின் சார்பாக நூல் வழங்கும்  விழா  15.02.2018  அன்று  ஊ.ஒ.தொ.பள்ளி,  மே.தாதனூர்,  அயோத்தியா பட்டணம், சேலம் மாவட்டம்  நடைபெற்றது.  இப்பள்ளியில் 3-ம்வகுப்பு ( 14 ), 4-ம் வகுப்பு ( 19 ) மற்றும் 5-ம் வகுப்புகளில் ( 13 ) பயிலும் 46 மாணவ  மாணவிகளுக்கு  இப்பள்ளியின் முன்னாள் மாணவர் மருத்துவர்.சுப்பிரமணியம் (மோகன் குமாரமங்கலம் அரசினர் மருத்துவமனை) அவர்களால் நூல்கள்  நன்கொடையாக வழங்கப்பட்டன.  இவ்விழா  திருமதி.பரணி Librarian, Art Reference Library, National Gallery of Modern Art, Bengaluru ) அவர்களால்  ஒருங்கிணைத்து  சிறப்பாக நடத்தப்பட்டது.
   









 ----------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளி தலைமையாசிரியர் திரு. ஜெயசீலன் அவர்களின் கடித நகல் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது மனைவியின் பிறந்தநாளை  தான் படித்த எங்கள் பள்ளியில் மாணவ மாணவிகளுடன்  கொண்டாடிய எம் பள்ளியின் முன்னாள் மாணவர் மருத்துவர் திரு சுப்பிரமணியம்
(ஊ‌.ஒ.தொ.பள்ளி,
மேட்டுப்பட்டி தாதனூர்,
அயோத்தியாபட்டணம்,
சேலம் - 636103 )


எங்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை 1960 களில் பயின்று,தற்போது மோகன் குமாரமங்கலம் அரசினர் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் மருத்துவர் திரு சுப்பிரமணியம் அவர்கள்  இன்று 15.02.2018 வியாழன் காலை 10 மணியளவில் பள்ளிக்கு தமது மனைவி திருமதி யசோதா,மகள் செல்வி சங்கீதா, மகன் செல்வன்  நந்தகுமார், என குடும்பத்துடன் வருகை புரிந்து தமது மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.மாணவ மாணவியர் "பூங்கொத்து கொடுத்து வரவேற்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.பள்ளியின் நூலகத்துக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர் படிக்கும் வகையில் 50 க்கும் மேற்பட்ட  நூல்களை நன்கொடையாக வழங்கினார்.மாணவர்களுக்கு தமது பள்ளிக்காலம் பற்றியும்,தான் எவ்வாறு படித்து இந்த நிலையை அடைந்தேன் என்றும்,அரசுப்பள்ளியில் படிப்பது இழிவல்ல என்றும், முயன்று படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்றும்,சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் பற்றியும் மிக அருமையான உரை நிகழ்த்தினார்.
விதை அமைப்பை சேர்ந்த பரணி அவர்கள் நூல்களை படிக்கவேண்டியதன் அவசியம் பற்றியும்,புத்தகங்களை சரியாக கையாளுதல் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்.
மாணவ மாணவியர் *அனைவருக்கும் கேக் தமது கரங்களால் குடும்பத்தார் அனைவரும் வழங்கினர்.மீண்டும் பள்ளிக்கு தன் நண்பர்களுடன் வருவதாகவும், பள்ளிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாகவும் கூறி,மலரும் நினைவுகளை சுமந்து கொண்டு மனநிறைவோடு விடைபெற்றார்‌. மருத்துவர் ஐயாவுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றிகள்.


No comments:

Post a Comment